Saturday, November 21, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்…!

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனம் தொடர்பில் வெளியான அறிவித்தல்…!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன் பின்னர் எமது பணிகள் விரைவாக தொடங்கப்படும். அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்கும். இந்த அமைச்சரவை அதிகபட்சமாக இருபத்தைந்து...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஒரே அணியாக பொது பிரச்சினைகளை கையாள உள்ளேன் – செல்வம் அடைக்கலநாதன்…

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (16.11.2024) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்க அங்கீகாரம்…

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15.11.2024) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது சம்பிரதாய ரீதியான அமர்வில் சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ்,...

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்தானந்த அளுத்கமகே…

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (16.11.2024) நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

புதிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டம்..!

பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு  இம்மாதம் 25, 26, 27 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று சனிக்கிழமை (16) வெளியிடப்படவுள்ளது. புதிய...

வன்னி தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் மூன்று புதிய முகங்கள்..!

பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி சார்பில் செ. திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார். கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது....

ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும்-நிஹால் தல்துவ..!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். “இப்போது தேர்தலுக்குப் பிந்தைய காலம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img