Sunday, April 19, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளர்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட  மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றுக்கு..!

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2025 ஆம் நிதியாண்டிற்கான சேவைகளுக்கான புதிய ஏற்பாடுகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும். இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – கவிழ்ந்த பிரான்ஸ் அரசு..!

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும்...

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றம்.!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் இன்று (4) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நேற்று (3) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...

சிலிண்டர் மீது அதிருப்தியில் இருக்கும். – முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதித் தேர்தலின் போதும், பொதுத் தேர்தலின் போதும் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்து அதன் வெற்றிக்காக பாடுபட்டோம். அவ்வாறிருக்கையில் எம் சார்பில் ஒருவருக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அதிருப்தியளிப்பதாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (4) கொழும்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...

மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் - FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் சபைத்தலைவருமான பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தனது...

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்ரி போல்ராஜ்..!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் முதற்தடவையாக கூடியுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் இரண்டு பிரதித்தலைவர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

11 நாடுகளின் ஊடகவியலாளர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்..!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மொரீஷியஸ் உட்பட 11 நாடுகளின் ஊடகவியலாளர்களை திங்கட்கிழமை (2) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.   இந்தியாவின் உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் புதிய பரிணமிப்பு தொடர்பிலும், புலம்பெயர் இந்தியர்களின் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் இதன்போது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள்...

மதுபானசாலை அனுமதி பட்டியல் இன்று வெளியாகும்..!

மதுபானசாலைக்கான அனுமதி யார் யாருக்கு வழங்கப்பட்டது என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடளுமன்றில் அறிவித்தாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  முன்வைத்த கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரயிலில் இருந்து கீழே விழுந்த ஈரானியப் பெண்..!

எல்லவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி ரயிலில் பயணித்த ஈரானிய பெண் ஒருவர் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான ஈரானிய பெண் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 37 வயதான ஈரானிய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img