கேரளமாநிலம் கொச்சியில்  கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

 இந்த கனமழையால் கொச்சி நகரின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஃபோர்ட் கொச்சி பகுதியில் கேரள அரசுப் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார்.

கண்ணமாலி பகுதியில் ஓடையை கடக்க முயன்ற போது வெள்ளநீர் மூவரை அடித்துச் சென்றுள்ளது. கொச்சி, அங்கமாலி முதலான இடங்களில் பலத்த மழையால் சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்திய வானிலை மையம் சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here