Tamil News Channel

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தகவல்..!

23-63ec4dc1311da

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்ற போதிலும் கட்சியின் இறுதித் தீர்மானம் அதிகாரபூர்வமாக எடுக்கப்படவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கட்சிகளும் கூடுதல் கரிசனை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts