பொரளை கொட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்துள்ளன.
தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.