ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதுடன் நாட்டை பாதுகாக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய கொடையாளர்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியது அனைத்து விடயங்களையும் விட முக்கியமானது எனவும் ஜனநாயக ரீதியில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கப்பட வேண்டும் என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here