தீயினால் உயிரிழந்த குழந்தைகள்!!!
டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் நேற்று முந்தினம்(25.05.2024) இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளது.
குறித்த தீவிபத்து தொடர்பான தகவல் அறிந்து உடனடியாக செயற்பட்ட தீயணைப்பு குழுவினரால் கடுமையான போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேற்படி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த மருத்துவமனை தீயணைப்பு துறையின் என்ஓசி சான்று இல்லாமல் செயல்பட்டு வந்ததமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய இதனை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விபத்து ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
![]()