2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
ராஜஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து முதலாவது இடத்தையே தக்கவைத்துக் கொள்ளும்.
மும்பை அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் குஜராத் அணியை பின் தள்ளி ஆறாவது நிலைக்கு முன்னேறும்.
இதேவேளை நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தது.
இதில் முதலாவது போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியை வீழ்த்தியிருந்தது.
இந்த வெற்றியுடன் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது நிலைக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.
நாளைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.