நாடு முழுவதும் நடைபெற்ற விசேட நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக தேடப்பட்ட 15 பேரை இலங்கை பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 27,654 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காகவும், 674 பேர் சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 220 பேரையும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 155 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here