பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் – ரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 வரை அவகாசம் : ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க எச்சரிக்கை!
பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரிக்கும் அரசாங்கத் தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
இத்தீர்மானம் மாற்றப்படாத பட்சத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
“பாடசாலை நேர நீட்டிப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருக்கும் கூடுதல் அழுத்தமாக மாறியுள்ளது. இதை ரத்து செய்யாவிட்டால் கடும் போராட்டம் நடைபெறும்,” எனக் குறிப்பிட்டார்.
![]()