சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக  07 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று திங்கட்கிழமை  (12) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த  ஒரு மாணவியும் இரண்டு மாணவர்களும் தற்போது பம்பஹின்ன மற்றும் பலாங்கொடை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சப்ரகமு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவொன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு  சிற்றுண்டிச்சாலையில் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here