மட்டக்களப்பில் கார் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் !
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் இன்று (14) ஒரு கார் வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரில் மூன்று பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார், சம்பவ தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிசார் தெரிவித்ததாவது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் வீதியை விட்டு விலகியது இதற்கான முக்கிய காரணமாகும்.
பொலிஸார் மேலும், குருக்கள்மடம் பகுதியில் வீதியில் அதிகளவான வளைவுகள் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் மிக கவனமாக வாகனம் செலுத்த வேண்டும் என்றும், பயணிகள் பாதுகாப்பை முக்கியமாகக் கவனிக்குமாறு எச்சரித்துள்ளனர்.
(மட்டக்களப்பு நிருபர்- சோபிதன்)
![]()