Tamil News Channel

மட். திருப்பெரும்துறையில் தென்னம் தோப்பில் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து!

IMG_8196

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

அந்த பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான பள்ளமாக உள்ள தென்னம் தோப்பு காணியில் குப்பைகளை கொட்டி நிரப்புவதற்காக மாநரசபைக்கு காணி உரிமையாளர்கள் இருவர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதையடுத்து 3 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியில் தினமும் பாரியளவிலான குப்பைகளை உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு சென்று கொட்டி வருகின்றனர்.

இந் நிலையில் சம்பவதினமான நேற்று மாலை 4 மணிக்கு குப்பைமேட்டில் தீ பற்றி எரிய ஆரம்பித்ததையடுத்து அந்த பகுதியில் உள்ள தென்னை மரங்கள் மற்ற மரங்களில் தீப்பற்றியதுடன் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts