மானிப்பாய் கோப்பாய் பிரதான வீதியில் உரும்பிராய் சந்திக்கு அண்மையாக மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மற்றுமொரு முச்சக்கர வண்டியை முந்த முற்பட்ட வேளை எதிரே வருகைதந்த ஹைஏஸ் ரக வாகனத்துடன் மோதி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2