ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க நீர்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.
மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.








