தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டதுடன் கட்சிக்கான பாடலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும், விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பாடலின் காட்சிகள் முழுவதுமாக 3டி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது.
“தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற வரிகள் வருகின்றன. இது எம்ஜிஆரை குறிப்பதாக தெரிகிறது.
பாடலின் நடுவே மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக த.வெ.க கொடியை ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவர் ஏந்தி நிற்பதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.








