விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமினவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அனுராதபுரத்தில் கட்சியின் “ஜன சடன” பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு விசேட செய்தியை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்தின் அரசியல் அழுத்தத்திற்கு தான் பணியமாட்டேன் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வெளியிடப்பட்ட குறித்த செய்தியில், ஆதரவாளர்களின் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்த ராஜபக்ஷ, அனுராதபுர பேரணியை ஶ்ரீலங்கா பொதுஜன அரசியல் இயக்கத்தின் “தீர்க்கமான புதிய ஆரம்பம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறையின் இரும்பு கம்பிகளுக்கு பின்னால் இருந்து நான் உங்களை பார்க்கிறேன். இங்கிருந்து நீங்கள் எனக்கு காட்டும் சகோதரத்துவத்தின் அரவணைப்பை நான் உணர்கிறேன்” என்று ராஜபக்ஷ கூறியுள்ளேன்.

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் “கஷ்டங்கள் சிலரை உடைக்கின்றன, ஆனால் மற்றவர்களை உருவாக்குகின்றன” என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டிய ராஜபக்ஷ, சவால்கள் தனது அரசியல் இயக்கத்தை இன்னும் வலுவாக்கியுள்ளதாகவும், கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது வலுவாக மாற தனது தந்தை தனக்கு கற்றுக்கொடுத்ததாகவும் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்த ராஜபக்ஷ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும், வாழ்கைச் செலவும் வரிச்சுமையும் சிறு, நடுத்தர வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் அரச விசாரணை நிறுவனங்களை அரசியல்மயமாக்குவதாகவும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நியாயமாக விசாரிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டவை மற்றும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண சபை தேர்தல் தாமதம் மற்றும் வேலைச் சந்தைக்குள் நுழையும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமை குறித்தும் ராஜபக்ஷ விமர்சித்தார்.

தனது செய்தியின் முடிவில், அரசாங்கத்தின் “அரசியல் அதிகாரத்திற்கு” தான் அடிபணியப் போவதில்லை என்றும், அச்சுறுத்தல்களுக்கு பயப்படப் போவதில்லை என்றும் ராஜபக்ஷ கூறினார்.

“எங்கள் உறுதிப்பாட்டை சிறைபிடிக்க முடியாது” என்று கூறிய அவர், ஆதரவாளர்கள் அமைதியாகவும், ஒழுக்கத்துடனும், சட்டத்தை மதித்தும் நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தற்போது நடைபெறும் விசாரணை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து ராஜபக்ஷ கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here