அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் பாரவூர்தி சாரதியொருவர் பொகவந்தலாவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு மணல் ஏற்றிச் சென்ற குறித்த பாரவூர்தி பொகவந்தலாவை காவல் நிலையத்திற்கு அருகில் வைத்துத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here