அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.
நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக கனடாவும் 25 சதவிகித வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ளது. அதேபோல மெக்சிக்கோவும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சரகம் கூறுகையில்,
“அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும்” என்றார்.








