அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள யூத அருங்காட்சியகத்தின் முன் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் “சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்” என்று கூச்சலிட்டதாக அந்நாட்டு பொலீசார் தெரிவிக்கின்றனர்.

ஒரு விழாவிற்குப் பிறகு யூத அருங்காட்சியகத்தை விட்டு வெளியேறும்போது அதிகாரிகள் சுடப்பட்டனர்.

அந்த நேரத்தில் நான்கு பேர் இருந்துள்ளனர் இதில் இருவர் சுடப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்ற சந்தேக நபரை இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here