நாட்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் வருமானம் அதிகரித்துள்ளது.
இதன்படி 2025ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 965.97 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின்(2024) முதல் 4 மாதங்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 894.94 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டின்(2024) முதல் 4 மாதங்களை ஒப்பிடும் போது இந்த ஆண்டு(2025) முதல் 4 மாதங்களில் 7.94 சதவீதமாக வருமானம் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.







