தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சி செய்யப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 10 கிராம் ,160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், குற்றத்திற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மற்றொரு சந்தேக நபரும் 10 கிராம் 350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38 மற்றும் 43 வயதுடைய தெஹிவளை மற்றும் மிஹிந்தலை பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.








