பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது, அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன் இணைந்து வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அந்தத் திருத்தங்களின்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறை நீக்கப்பட்டுள்ளதுடன், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வுப் பணியகமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Gazette
https://documents.gov.lk/view/extra-gazettes/2025/10/2458-65_E.pdf








