காலி வீதி, அம்பலாங்கொடை, உரவத்த பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி தம்பதி ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் அம்பலாங்கொடை, மாதம்பே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொலை செய்யப்பட்ட தம்பதியின் அயல் வீட்டில் வசிக்கும் 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கர்ப்பிணிப் பெண் இந்த தம்பதியைக் கொலை செய்வதற்குச் சந்தேக நபருக்கு உதவியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here