அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க எச்சரித்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு எதிராகவும் அதேபோல சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மாவட்ட ரீதியான குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் எனவும், அதற்கான உறுதியை ஆளுநர் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here