மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
119 அவசர எண்மூலம் “ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டார்” என்ற முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணையில், தேவஹுவையைச் சேர்ந்த 59 வயது நபர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, மற்றொருவர் வீதியை மறித்து நிறுத்தி தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் நீண்டகால தகராறு நிலவி வந்தது, அதுவே இந்தக் கொலையிற்குக் காரணமாகியிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மகுலுகஸ்வெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






