மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மறைக்கப்பட்ட அரிசி இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு விற்கப்படும் அரிசி இருப்புக்களை தேடி நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சோதனைகளை மேற்கொண்டனர்.

அக்குரஸ்ஸவிலுள்ள பல முக்கிய வர்த்தக நிலையங்கள் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த நகரின் முன்னணி வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஹக்மன மற்றும் கிரிந்தவைச் சுற்றியுள்ள கடைகளும் சோதனையிடப்பட்டன.

அரிசி இருப்புக்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பதை சோதிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் வெலிகமவில் உள்ள வணிக நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர்.

இதுபோன்ற பல வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நேற்று சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here