நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் வாங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சில நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காகப் பெற்ற கடன்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதால் இது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காக 15 பில்லியன் ரூபாய்க்கு அதிகமாக வங்கிக் கடன்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடினர்.

இந்த ஆண்டு 2,50000 மெட்ரிக் டன் நெல் கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதோடு சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், மீண்டும் அரிசிக்கான பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here