வடக்கு மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
ஆனையிறவு உப்பளத்தில் அதி நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை கொண்டு நிர்மானிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்ட எதிர்வரும் 26 ஆம் திகதி ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறக்கப்பட உள்ள நிலையில் இன்று (3/7/2025) உப்பளத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய உப்பளமான குறிஞ்சா தீவு உப்பு பாத்தியீடும் இடம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இவ் விஜயத்தின் போது பிரதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், தேசிய உப்பு உற்பத்தி நிறுவன தலைவர் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

[கிளிநொச்சி நிருபர் – பரமசிவன்]






