இலங்கையில் ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மூன்று சீன பிரஜைகள் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி, ஜிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த மூன்று சீனர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட போது ஐந்து கைத்தொலைபேசிகள், உரிமையாளர் இல்லாத கடவுச்சீட்டு மற்றும் நான்கு வங்கி அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








