நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்ய அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) தற்போது RCB அணியை நிர்வகித்து வருகிறது.
அணி விற்பனை அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் தொழிலதிபர் விஜய் மல்லையா உருவாக்கிய RCB அணியை, பின்னர் டியாஜியோ நிறுவனம் கையகப்படுத்தியது.
2008ஆம் ஆண்டு தொடங்கி 17 ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்று வந்த RCB, 2025ஆம் ஆண்டில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆனால், வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அணிக்கு கடுமையான சோகத்தை ஏற்படுத்தியது.
அந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.







