தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
இவ்விபத்து, நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் ஏழாவது தளத்தில் இடம்பெற்றது.
தீ வேகமாக பரவியதால், அங்கு தங்கியிருந்த முதியவர்களும் உடல்நலக்குறைவால் இயங்க முடியாதவர்களும் தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தியபோதிலும், பல உயிர்கள் காப்பாற்ற முடியவில்லை.
மீட்புப் பணியில் ஈடுபட்ட சிலர் உட்பட 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், உறுதியான காரணத்தை கண்டறிய, போஸ்னியா காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.








