முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலையில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், தவறான செயல்களில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டு, பின்னர் ஆசிரியராக பணியாற்றி வந்த குறித்த நபர், சில மாணவர்களின் உதவியுடன் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்று, அவர்களை அச்சுறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த செயல் குறித்து உள்ளூர் இளைஞர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியரின் மற்றும் சில மாணவர்களின் கைப்பேசிகளில் பல மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்தது கண்டறியப்பட்டது.

அத்துடன், ஆசிரியர் மாணவர்களைப் பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் விழச் செய்து, அவ்வழியே புகைப்படங்களைப் பெற்றதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர், தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கைப்பேசிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே ஆசிரியர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்டகால விசாரணை முடிவில், அவர் நவம்பர் 4ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here