இங்கிலாந்தின் மென்செஸ்டர் பகுதியில், வாகனம் ஒன்றில் பயணித்தவர், வாகனத்தைப் பாதசாரிகள் கடவையில் செலுத்தியதுடன், கத்திகுத்து தாக்குதலை நடத்தியபோது அதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யூதர்களின் புனித தினமான இன்று, வழிபாட்டுத் தலம் ஒன்றுக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அந்த நபரிடம் கைக்குண்டு ஒன்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதை அடுத்து, அவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
இதனையடுத்து, குறித்த தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயதானவர்கள் உட்பட்ட அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








