அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவரினால் 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் AI செயலியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அதி நவீன கண்டுபிடிப்பு, இதய நோய் கண்டறிதலில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வயதிலிருந்தே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட சித்தார்த் நந்தியாலா என்ற குறித்த மாணவன், Oracle மற்றும் ARM நிறுவனங்களின் AI சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம், உலகின் மிக இளம் AI சான்றிதழ் பெற்ற நிபுணர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசியின் மூலம் இதய ஒலிகளைப் பதிவு செய்து, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் திறன் கொண்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் 15,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த செயலி ஆரம்ப நிலையிலேயே இதய நோய்களைக் கண்டறிந்து, உடனடி சிகிச்சை அளிக்க உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here