கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் லடாக் எல்லைப் பிரச்சினைகளுக்குப் பிறகு, இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக்குப் பின்னர் இந்த விமானச் சேவை இடைநிறுத்தப்பட்டது.
பின்னர், லடாக் எல்லை பிரச்சினைகள் காரணமாக சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்தித்து நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கும் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் பின்னர், இந்திய வெளியுறவுத்துறை விரைவில் நேரடி விமான சேவை ஆரம்பமாகும் என்று அறிவித்தது.
அதன்படி, கொல்கத்தா – குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை அக்டோபர் 26 அன்று தொடங்கியது. மேலும், ஷாங்காய் – டெல்லி இடையிலான விமான சேவை நவம்பர் 9 அன்று ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








