ஹிக்கடுவை, தொடந்துவ பகுதியில் நேற்று புதன்கிழமை (25) கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 57 வயதான இந்திய பிரஜை ஆவார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் நேற்று மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன்போது, பிரதேசவாசிகள் குறித்த நபரை கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றுவதற்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here