மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30,000 மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.







