ஏப்ரல்  மாத  இறுதிக்குள்  இலங்கையின்  மொத்த  உத்தியோகபூர்வ  கையிருப்பு  5.5 பில்லியன்  அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி உயர்வது, பணவீக்கம்  மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவை குறைக்கும் எனவும்  வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்க உதவுமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்மூலம் உலகளாவிய ரீதியில் இலங்கையின் நிதி  மீதான வலுவான நம்பிக்கை அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here