சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ள நிலையில் இது  செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவுவதுடன் உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளை எலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயியுள்ளன.

மேலும், அதேவேளை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகம் பல கோடி மக்கள் உயிரிழந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை உருவாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here