கடந்த காலங்களில் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பை எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு தாம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானியத் தூதுவர் இசோமடா அகியோவுக்கும் (Isomata Akio) இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் இராஜதந்திர உறவைத் தொடர்ந்தும் பேணுமாறும், அதற்குத் தாம் முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பானியத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.










