பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (4) மதியம் 12 மணிக்கு தொடங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது.

மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

ரசிகர்கள் எளிதில் போட்டிகளைப் பார்வையிடும் வகையில், நுழைவுச்சீட்டு விலைகள் மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

  • சாதாரணப் பிரிவுகளுக்கான விலை: முதல் இரண்டு போட்டிகளுக்கு 200 பாகிஸ்தான் ரூபாவிலிருந்து, இறுதிப் போட்டிக்கு 300 ரூபா வரை.

  • VIP பிரிவுகளுக்கான விலை: 500 முதல் 600 ரூபா வரை.

ரசிகர்கள் தங்களது இருக்கைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம் pcb.tcs.com.pk மூலம் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here