UNESCO அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Audrey Azoulay இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு இன்று (16.07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவருடன் மேலும் மூன்று பேரடங்கிய தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.
குறித்த பிரதிநிதிகள் இன்று (16.07) அதிகாலை 2.10 மணியளவில் டொகாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையை வந்தடைந்துள்ளார்.
அவர்களை வரவேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








