முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவருக்குப் பின் வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணராமல் மக்களை தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணரும் வாக்குறுதிகளை இரு தலைவர்களும் நிறைவேற்றத் தவறியதாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த பிரேமதாச, வெளிப்படையான விசாரணைக்கு தனது அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள திட்டங்களை முழுமையாக வெளிக்கொணர உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களை ஈடுபடுத்த அவர் முன்மொழிந்தார்.

இதற்குப் பொறுப்பான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும், சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதாகவும் பிரேமதாச உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here