தெஹிவளை இருந்து வெள்ளவத்தை வரை, கரையோர வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களால் பந்தயத்திற்காக பயன்படுத்தட்டதாக கூறப்படும் 10 உந்துருளிகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் மொரட்டுவை, ரத்மலானை, கல்கிசை, தெஹிவளை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான 10 பேரையும் இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here