மத்திய கிழக்கு பிராந்திய மோதலை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்திற்கு அமைய, ஈரான் உடனடியாக மசக்கெண்ணை விற்க அமெரிக்கா அனுமதிக்கும் என்ற செய்தியை அடுத்து எண்ணெய் விலை கடந்த மூன்று மாதத்துக்கு முன்பிருந்த குறைந்தபட்சத்தை எட்டியுள்ளது.
இதற்கமைய,ப்ரென்ட் வகை மசகு எண்ணெய் 5% சரிந்து $78.96, மார்ச் மாதத்துக்கு பின்னர் முதல் முறை 80 டொலர்களுக்கு கீழ் பதிவாகியுள்ளது.
இதேநேரம் WTI வகை எண்ணெய் 5.8% வீழ்ந்து $76.05 ஆக பதிவாகியுள்ளது.
பல மாதங்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இதற்கமைய, ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட கூடாது, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நடுநிலையாக்க வேண்டும், ஹோர்முஸ் நீரிணையில் குறுக்கீடு செய்யக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ளிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஒப்பந்தத்தின் முழு விவரம் வெளியாகும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள போதும் அது வெளியாகவில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.








