எதிர்வரும் நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதிய போக்குவரத்துச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து அதிகாரிகள் விசேட ஏற்பாடுகளை அறிவித்துள்ளனர்.
அதிகரித்துள்ள தேவைக்கு ஏற்ப சுமார் 60 மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் முயற்சிகளுக்கு மேலதிகமாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் குறிப்பிட்ட கால அட்டவணையின்றி கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்புக்கு இன்று இரவும் நாளை காலையும் விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.








