மஹியங்கனை ரஜமஹா விகாரையின் எசல பெரஹராவிற்கு அழைத்து வரப்பட்ட பதுலு முத்தியங்கன ரஜமஹா விகாரையைச் சேர்ந்த ‘மது’ என்ற யானை ஒன்று பழைய மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது. 30 வயதையுடைய யானையே உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எசல பெரஹராவிற்கு கலந்து கொண்ட யானைகளுக்கு உணவளிப்பதற்காக லொறி ஒன்றில் யானைகளை ஏற்றிச் சென்ற போது ஹசலக்க, செவெல பொக்குவ பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள், பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பலர் இணைந்து மலசலகூட குழியில் விழுந்த ‘மது’வை பேக்ஹோ மூலம் மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இரவு ஏழு மணியளவில் இந்த யானை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உயிரிழந்த யானையின் உடலில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, ஹசலக்க பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here