பொதுத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகின்றது.

இச் சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களுக்கான நிதித் தேவையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள இடைக்கால பாதீட்டுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடைக்கால பாதீட்டுத் திட்டம் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் தேர்தலுக்குப் பணம் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டாலும், தேர்தல் திகதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனவும் இந்த கூட்டத்தில் தேர்தல் திகதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here