எல்ல – வெல்லவாய சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இரண்டு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இதற்காக தியத்தலாவ விமானப்படை தளத்தில் ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் MI-17 வானூர்தியும், வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் பெல் 412 வானூர்தியும் தயாராக உள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்லவும், தேவையான பிற மீட்பு நடவடிக்கைகளிலும் இந்த வானூர்திகள் பயன்படுத்தப்படலாம் என விமானப்படை தெரிவித்துள்ளது.








